ஏசாயா 49:18-22 - WCV
18
உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் உன்னிடம் ஒருங்கே வருகின்றனர்: என் உயிர்மேல் ஆணை! நீ அவர்கள் அனைவரையும் அணிகலன்போல் அணிந்துகொள்வாய்: மணப்பெண் அணிவதுபோல் அணிந்துகொள்வாய், என்கிறார் ஆண்டவர்.
19
பாழடைந்து, அழிந்து, மண் மேடாய்ப் போன உன் நாட்டின் பகுதிகள் இப்பொழுது மக்கள் குடியிருப்பதற்கு மிகவும் குறுகியதாயிருக்கும்: முன்பு உன்னை விழுங்கியவர் உன்னைவிட்டு வெகு தொலைவுக்குச் செல்வர்.
20
உன் துக்க காலத்தில் பிறந்த உன் பிள்ளைகள் உன் செவிகளில் “இந்த இடம் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது: நாங்கள் குடியிருக்கப் போதிய இடம் தாரும்” என்பர்.
21
அப்போது நீ, “இவர்களை எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்? நான் பிரிவுத் துயரால் வாடினேன்! மலடியாய் இருந்தேன்! நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்! அப்படியிருக்க இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்? நான் தன்னந்தனியளாய் விடப்பட்டிருக்க, எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?” என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வாய்.
22
என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: 'வேற்றினத்தாருக்கு நேராக என் கையை உயர்த்துவேன்: மக்களினங்களை நோக்கி என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்: அவர்கள் உன் புதல்வரை மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்: உன் புதல்வியரைத் தம் தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர்.