21
ஆதலால், சிறுமையுற்றவளே, திராட்சை இரசம் இன்றியே குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.
22
தம் மக்கள் சார்பாக வழக்காடும் உன் கடவுளாகிய ஆண்டவர், உன் தலைவர் கூறுவது இதுவே: “இதோ, உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்: என் சினக் கிண்ணத்தினின்று நீ இனிக் குடிக்கவேமாட்டாய்.”
23
அக்கிண்ணத்தை உன்னை ஒடுக்கினோர் கையில் திணிப்பேன்: “நாங்கள் கடந்து செல்வதற்கு நீ முகங்குப்புற விழுந்துகிட” என்று அவர்கள் உன்னிடம் சொன்னார்களே! உன் முதுகை அவர்கள் தரையாகவும், கடந்து செல்வோருக்குக்குத் தெருவாகவும் மாற்றினார்களே!