சங்கீதம் 24:7-10 - WCV
7
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்: தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
8
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்: இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.
9
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்: தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
10
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்: இவரே மாட்சிமிகு மன்னர்.