3
அவ்விலைமகளின் காமவெறி என்னும் மதுவை எல்லா நாட்டினரும் குடித்தனர்: மண்ணுலக அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்: உலகின் வணிகர்கள் அவளுடைய வளங்களால் செல்வர்கள் ஆனார்கள்.”
4
பின்னர் விண்ணிலிருந்து இன்னொரு குரலைக் கேட்டேன்: அது சொன்னது: என் மக்களே, அந்நகரைவிட்டு வெளியேறுங்கள், அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும் அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு உட்படாதிருக்கவும் வெளியே போய்விடுங்கள்.
5
அவளின் பாவங்கள் வானைத்தொடும் அளவுக்குக் குவிந்துள்ளன: கடவுள் அவளின் குற்றங்களை நினைவில் கொண்டுள்ளார்.
6
அவள் உங்களை நடத்தியவாறே நீங்களும் அவளை நடத்துங்கள்: அவளுடைய செயல்களுக்கு ஏற்ப இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்: அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த மதுவுக்குப் பதிலாக இரு மடங்கு கொடுங்கள்.