1
கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்: உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்: எருசலேமைப் பாழடையச் செய்தனர்.
2
உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள்:
3
அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்: அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.
4
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்: எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.
5
ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ?
6
உம்மை அறியாத வேற்று நாட்டினர்மீது, உமது பெயரைத் தொழாத அரசர்கள் மீது உம் சினத்தைக் கொட்டியருளும்.
7
ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்: அவரது உறைவிடத்தைப் பாழாக்கி விட்டார்கள்.