22
நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில்.
23
அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாலோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி: ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.
24
மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர்: மண்ணுலக அரசர்கள் தங்களுக்குப் பெருமை சேர்ப்பவற்றையெல்லாம் அங்குக் கொண்டு செல்வார்கள்.