எரேமியா 31:36-40 - WCV
36
மேற்கண்ட நியமங்கள் என் திருமுன்னின்று மறைந்துவிடுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினர் என் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமல் போய்விடுவர், என்கிறார் ஆண்டவர்.
37
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மேலே வான்வெளி அளக்கப்படக் கூடுமாயின், கீழே பூவுலகின் அடித்தளங்களைக் கண்டுபிடிக்க இயலுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினரின் அனைத்துச் செயல்களையும் முன்னிட்டு அவர்கள் அனைவரையும் நான் தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.
38
இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர் அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர்.
39
அதன் எல்லை நேராகக் காரேபு மலைவரை சென்று, கோவாவை நோக்கித் திரும்பும்.
40
பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது: அழித்தொழிக்கப்படாது.