1மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை: கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.ஏசா 50:2 ஆதி 18:14 எண் 11:23 எரே 32:17 2உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன: உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.ஏசா 50:1 உபா 32:19 யோசு 7:11 நீதி 15:29 எரே 5:25 3உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன: உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன: உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.ஏசா 1:15 ஏசா 1:21 எரே 2:30 எரே 2:34 எரே 22:17 எசே 7:23 எசே 9:9 எசே 22:2 எசே 35:6 ஓசி 4:2 மீகா 3:10-12 மீகா 7:2 மத் 27:4 4நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை: உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை: வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பொய்யைப் பேசி, வஞ்சனையைக் கருத்தரித்துத் தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.ஏசா 59:16 எரே 5:1 எரே 5:4 எரே 5:5 எசே 22:29-31 மீகா 7:2-5 5நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்: சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்: அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்: உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.ஏசா 14:29 நீதி 23:32 6அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா: அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்: அவர்களின் செயல்கள் தீயின: அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!ஏசா 28:18-20 ஏசா 30:12-14 யோபு 8:14 யோபு 8:15 7தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன: குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்: அவர்கள் எண்ணங்கள் தீயவை: பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.நீதி 1:16 நீதி 6:17 ரோம 3:15 8அமைதி வழியை அவர்கள் அறியார்: நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை: தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்: அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.நீதி 3:17 லூக் 1:79 ரோம 3:17 9ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது: நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை. ஒளிக்கெனக் காத்திருந்தோம்: காரிருள்தான் கிட்டியது: விடியலை எதிர்பார்த்தோம்: இருளிலேயே நடக்கின்றோம்:புலம் 5:16 புலம் 5:17 ஆபகூ 1:13 10பார்வையற்றோரைப் போல் சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்: கண்ணில்லாதவரைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்: நண்பகலிலும் மங்கிய பொழுதிலும் செத்தவர்போல் இருக்கின்றோம்.உபா 28:29 யோபு 5:14 நீதி 4:19 எரே 13:16 புலம் 4:14 ஆமோ 8:9 யோவா 11:9 யோவா 11:10 யோவா 12:35 யோவா 12:40 1யோவா 2:11 11கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்: புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்: நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம், ஒன்றையும் காணவில்லை: விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.ஏசா 51:20 சங் 32:3 சங் 32:4 சங் 38:8 ஓசி 7:14 12உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன: எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன: எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன: எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.ஏசா 1:4 எஸ்றா 9:6 எரே 3:2 எரே 5:3-9 எரே 5:25-29 எரே 7:8-10 எசே 5:6 எசே 7:23 எசே 8:8-16 எசே 16:51 எசே 16:52 எசே 22:2-12 எசே 22:24-30 எசே 23:2-49 எசே 24:6-14 ஓசி 4:2 மத் 23:32 மத் 23:33 1தெச 2:15 1தெச 2:16 13ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவரை வஞ்சித்தோம்: எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்: ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்பற்றிப் பேசினோம்: பொய்யானவற்றை மனதில் உருவாக்கி அவற்றை மொழிந்தோம்.ஏசா 32:6 ஏசா 48:8 ஏசா 57:11 சங் 78:36 எரே 3:10 எரே 42:20 எசே 18:25 ஓசி 6:7 ஓசி 7:13 ஓசி 11:12 அப் 5:3 அப் 5:4 14நீதி துரத்தப்பட்டது: நேர்மை தொலையில் நின்றது: பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது: உண்மைக்கு அங்கே இடம் இல்லை.ஏசா 59:4 ஏசா 5:23 ஏசா 10:1 ஏசா 10:2 சங் 82:2-5 பிரச 3:16 எரே 5:27 எரே 5:28 எரே 5:31 ஆமோ 5:7 ஆமோ 5:11 மீகா 3:9-11 மீகா 7:3-5 ஆபகூ 1:4 செப் 3:1-3 15உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது: தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்: ஆண்டவர் அதைக் கண்டார்: அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.ஏசா 48:1 சங் 5:9 சங் 12:1 சங் 12:2 எரே 5:1 எரே 5:2 எரே 7:28 ஓசி 4:1 ஓசி 4:2 மீகா 7:2 16இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்: அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து: அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது.ஏசா 50:2 ஏசா 64:7 ஆதி 18:23-32 சங் 106:23 எரே 5:1 எசே 22:30 மாற் 6:6 17அவர் நேர்மையை மார்புக் கவசமாய் அணிந்துகொண்டார்: விடுதலையைத் தலைச்சீராவாய்த் தம் தலையில் வைத்துக்கொண்டார்: அநீதிக்குப் பழிவாங்குதலை ஆடையாய் உடுத்திக் கொண்டார்: அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டார்.ஏசா 11:5 ஏசா 51:9 யோபு 29:14 ரோம 13:12-14 2கொரி 6:7 எபே 6:14 எபே 6:17 1தெச 5:8 வெளிப் 19:11 18தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்: அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்: தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்: தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.ஏசா 63:6 யோபு 34:11 சங் 18:24-26 சங் 62:12 எரே 17:10 எரே 50:29 மத் 16:27 ரோம 2:6 வெளிப் 20:12 வெளிப் 20:13 19மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்: கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்: ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர, ஓடிவரும் ஆறென அவர் வருவார்.ஏசா 11:9-16 ஏசா 24:14-16 ஏசா 49:12 ஏசா 66:18-20 சங் 22:27 சங் 102:15 சங் 102:16 சங் 113:3 தானி 7:27 செப் 3:8 செப் 3:9 மல்கி 1:11 வெளிப் 11:15 20சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்: யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்.ஒபதி 1:17-21 ரோம 11:26 ரோம 11:27 21அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.ஏசா 49:8 ஏசா 55:3 எரே 31:31-34 எரே 32:38-41 எசே 36:25-27 எசே 37:25-27 எசே 39:25-29 எபிரெ 8:6-13 எபிரெ 10:16