12
ஆதலால் இஸ்ரயேலின் தூயவர் கூறுவது இதுவே: என் எச்சரிக்கையை நீங்கள் அவமதித்தீர்கள்: அடக்கி ஆள்வதிலும் ஒடுக்குவதிலும் நம்பிக்கை வைத்தீர்கள்: அவற்றையே பற்றிக் கொண்டிருந்தீர்கள்.
13
ஆதலால், உயர்ந்த மதிற்சுவரில் இடிந்துவிழும் தறுவாயிலுள்ள பிளவு திடீரென்று நொடிப்பொழுதில் சரிந்து விழுவதுபோல் இந்தத் தீச்செயல் உங்கள்மேல் விழும்.
14
அது இடிந்து வீழ்வது, குயவனின் மட்கலம் சுக்குநூறாய் உடைந்து போவதுபோல் இருக்கும்: அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ உடைந்த துண்டுகளில் எதுவுமே உதவாது.