2
'எவ்வளவு காலம் நீங்கள் நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்? எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்? (சேலா)
3
எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்: சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்!
4
எளியோரையும் வறியோரையும் விடுவிங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!
5
உங்களுக்கு அறிவுமில்லை: உணர்வுமில்லை: நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்: பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன.