6
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: குருதியைச் சிந்தும் நகருக்கு ஐயோ கேடு! துருப்பிடித்த கொப்பரை இது: இதன் துரு நீங்கவே இல்லை: ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு: தேர்வு செய்து எடுக்க வேண்டாம்.
7
ஏனெனில், அவள் சிந்திய குருதி அவள் நடுவில் உள்ளது: வெறுமையான பாறையில் அதை ஊற்றினாள்: புழுதியில் மறையும்படித் தரையில் அதை ஊற்றவில்லை.
8
சினத்தைக் கிளறவும் பழிவாங்கவுமே புழுதியில் அதை மறைக்காது வெறுமையான பாறையில் ஊற்றச் செய்தேன்.
9
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: குருதி சிந்திய நகருக்கு ஐயோ கேடு! விறகுகளை நானும் உயரமாய் அடுக்குவேன்.
10
எனவே விறகுக் கட்டைகளை மிகுதியாக அடுக்கு: நெருப்பு மூட்டி இறைச்சியை நன்கு வேகவை: நறுமணப் பொருள்களையும் கலந்துவிடு: எலும்புகளும் கரியட்டும்.
11
பின்னர், வெறுமையான கொப்பரையை நெருப்புக் கட்டைகள் மேல் வை: களிம்பு காய்ந்து உருகும்வரை அது சூடேறட்டும்: அதன் அழுக்கு கரைந்து போகட்டும்: அதைப் பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.
12
அனைத்து முயற்சிகளையும் அது வீணடித்துவிட்டது. அதன் திண்மையான துரு நெருப்பினாலும் அகலவேயில்லை.
13
உன்னுடைய துரு காம வெறியாகும். ஏனெனில், நான் உன்னைத் தூய்மைத் படுத்த விழைந்தேன். ஆனால் நீ உன் அழுக்கினின்று தூய்மையாகவில்லை. உனக்கெதிரான என் சினம் தணியுமட்டும் நீ தூய்மையாகப் போவதில்லை.
14
ஆண்டவராகிய நானே உரைத்தேன்: நான் செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பின்வாங்க மாட்டேன். இரக்கம் காட்ட மாட்டேன்: மனம் மாறமாட்டேன். உன் நடத்தைக்கு ஏற்பவும் நீ தீர்ப்பிடப்படுவாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.