மீகா 3:10-12 - WCV
10
இரத்தப்பழியால் சீயோனையும், அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள்.
11
அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்: அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்: இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்: ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, “ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது” என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.
12
ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்: எருசலேம் பாழடைந்த மண்மேடாக மாறும்: கோவிலுள்ள மலையோ அடர்ந்த காடாகும்.”