18
சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை முறிந்து போகும்: பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு நிலைத்து நிற்காது: பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்து வரும்போது நீங்கள் அவனால் நசுக்கப்படுவீர்கள்.
19
பகை உங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் உங்களை வாரிக்கொண்டு போகும்: அது காலைதோறும், பகலும் இரவும், பாய்ந்து வரும்: அச்செய்தியை உணர்வதே மிகவும் திகிலூட்டும்.
20
கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது: போர்த்திக் கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது.