இணை வசன வேதாகமம்

Click to Subscribe

பிரசங்கி 7

                   
புத்தகங்களைக் காட்டு
1விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.நீதி 15:30 நீதி 22:1 ஏசா 56:5 லூக் 10:20 எபிரெ 11:2 எபிரெ 11:39
2விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும் முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.ஆதி 48:1-22 ஆதி 49:2-33 ஆதி 50:15-17 யோபு 1:4 யோபு 1:5 ஏசா 5:11 ஏசா 5:12 ஏசா 22:12-14 ஆமோ 6:3-6 மத் 5:4 மத் 14:6-12 1பேது 4:3 1பேது 4:4
3சிரிப்பைவிடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்: ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்.சங் 119:67 சங் 119:71 சங் 126:5 சங் 126:6 எரே 31:8 எரே 31:9 எரே 31:15-20 எரே 50:4 எரே 50:5 தானி 9:3-19 தானி 10:2 தானி 10:3 தானி 10:19 சகரி 12:10-14 லூக் 6:21 லூக் 6:25 யோவா 16:20-22 2கொரி 7:9-11 யாக் 4:8-10
4ஞானமுள்ளவரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவே இருக்கும்: மூடரின் உள்ளத்திலோ சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும்.நெகே 2:2-5 ஏசா 53:3 ஏசா 53:4 மத் 8:14-16 மாற் 5:38-43 லூக் 7:12 லூக் 7:13 யோவா 11:31-35
5மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும் ஞானி இடித்துரைப்பதைக் கேட்பதே நன்று.சங் 141:5 நீதி 9:8 நீதி 13:13 நீதி 15:31 நீதி 15:32 நீதி 17:10 நீதி 27:6 வெளிப் 3:19
6மூடரின் சிரிப்பு, பானையின்கீழ் எரியும் முட்செடி படபடவென்று வெடிப்பதைப் போன்றது: அதனால் பயன் ஒன்றுமில்லை.பிரச 2:2 சங் 58:9 சங் 118:12 ஏசா 65:13-15 ஆமோ 8:10 லூக் 6:25 லூக் 16:25 2பேது 2:13-17 யூதா 1:12 யூதா 1:13
7இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்: கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.உபா 28:33 உபா 28:34 உபா 28:65
8ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது: உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப் பொறுமையோடு இருப்பதே மேல்.சங் 126:5 சங் 126:6 ஏசா 10:24 ஏசா 10:25 ஏசா 10:28-34 லூக் 16:25 யாக் 5:11 1பேது 1:13
9உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே: மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம்.1சாமு 25:21 1சாமு 25:22 2சாமு 19:43 எஸ்தர் 3:5 எஸ்தர் 3:6 நீதி 14:17 நீதி 16:32 யோனா 4:9 எபே 4:26 எபே 4:27 யாக் 1:19
10“இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?” என்று கேட்காதே: இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.நியா 6:13 எரே 44:17-19
11மரபுரிமைச் சொத்தோடு ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்: இதுவே உலகில் வாழும் மக்களுக்கு நல்லது.பிரச 9:15-18 1இரா 3:6-9 லூக் 16:8 லூக் 16:9 1தீமோ 6:17-19
12பணம் நிழல் தருவதுபோல் ஞானமும் நிழல் தரும்: ஞானம் உள்ளவருக்கு அதனால் வாழ்வு கிடைக்கும்: அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே.யோபு 1:10 யோபு 22:21-25 நீதி 2:7 நீதி 2:11 நீதி 14:20 நீதி 18:10 நீதி 18:11 ஏசா 33:6
13கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார். அவர் கோணலாக்கினதை நேராக்க யாரால் இயலும்?யோபு 37:14 சங் 8:3 சங் 107:43 ஏசா 5:12
14வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு: துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: “அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்”.பிரச 3:4 உபா 28:47 சங் 30:11 சங் 30:12 சங் 40:3 மத் 9:13 யோவா 16:22 யோவா 16:23 யாக் 5:13
15என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார்.பிரச 2:23 பிரச 5:16 பிரச 5:17 பிரச 6:12 ஆதி 47:9 சங் 39:6
16நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்?நீதி 25:16 மத் 6:1-7 மத் 9:14 மத் 15:2-9 மத் 23:5 மத் 23:23 மத் 23:24 மத் 23:29 லூக் 18:12 ரோம 10:2 பிலிப் 3:6 1தீமோ 4:3
17தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்?எரே 2:33 எரே 2:34 எசே 8:17 எசே 16:20 யாக் 1:21
18ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.பிரச 11:6 நீதி 4:25-27 நீதி 8:20 லூக் 11:42
19ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.பிரச 9:15-18 2சாமு 20:16-22 நீதி 21:22 நீதி 24:5 கொலோ 1:9-11
20குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை.1இரா 8:46 2நாளா 6:36 யோபு 15:14-16 சங் 130:3 சங் 143:2 நீதி 20:9 ஏசா 53:6 ரோம 3:23 யாக் 3:2 1யோவா 1:8-10
21பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும்.2சாமு 19:19
22நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும்.1இரா 2:44 மத் 15:19 மத் 18:32-35 யோவா 8:7-9 யாக் 3:9
23இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.ஆதி 3:5 1இரா 3:11 1இரா 3:12 1இரா 11:1-8 ரோம 1:22 1கொரி 1:20
24ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது: மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்?உபா 30:11-14 யோபு 11:7 யோபு 11:8 யோபு 28:12-23 யோபு 28:28-23 சங் 36:6 சங் 139:6 ஏசா 55:8 ஏசா 55:9 ரோம 11:33 1தீமோ 6:16
25நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்: ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும், மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன்.பிரச 1:13-17 பிரச 2:1-3 பிரச 2:12-3 பிரச 2:20-3
26சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்: உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்.நியா 16:18-21 நீதி 2:18 நீதி 2:19 நீதி 5:3-5 நீதி 7:21-27 நீதி 9:18 நீதி 22:14 நீதி 23:27 நீதி 23:28
27“ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்” என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்: அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை.பிரச 1:1 பிரச 1:2 பிரச 12:8-10
28ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை.பிரச 7:23 பிரச 7:24 ஏசா 26:9
29நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.ஆதி 1:26 ஆதி 1:27 ஆதி 5:1
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.