2சாமுவேல் 20:16-22 - WCV
16
அப்போது அறிவுக்கூர்மையுள்ள ஒரு பெண் நகரிலிருந்து குரல் கொடுத்து, கேளுங்கள்: கேளுங்கள். தயைகூர்ந்து யோவாபை இங்கே வரச் சொல்லுங்கள். நான் அவரிடம் பேச வேண்டும் என்றான்.
17
அவரும் அவளருகே வந்தார். அப்பெண் அவரை நோக்கி,”யோவாபு நீர் தாமா? என்றாள்.”நானேத்தான்”என்றார் யோவாபு.”உம் அடியவளின் வார்த்தைகளைக் கேளும் என்றான் அப்பெண். கேட்கிறேன் என்றார். யோவாபு.
18
அவள் தொடர்ந்து கூறியது:”முற்காலத்தில் அடிக்கடி கூறுவார்கள் ஆபேலுக்குச் சென்று ஆலோசனை கேட்பார்களாக! அதன் படியே பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
19
இஸ்ரயேலில் நாங்கள் அமைதியும் நாணயமும் உடையவர்கள். இஸ்ரயேலின் தாயென விளங்கும் இந்நகரை நீர் அழிக்கத் தேடுவதேன்? ஆண்டவரின் உரிமைச் சொத்தை நீர் விழுங்குவானேன்? என்று அப்பெண் கேட்டாள்.
20
அதற்கு யோவாபு இல்லை, விழுங்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
21
காரியம் அதுவல்ல. எப்ராயிம் மலைப்பகுதியைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்பவன் அரசர் தாவீதுக்கு எதிராகக் கையோங்கியுள்ளான். அவனை மட்டும் தாருங்கள். நான் நகரிலிருந்து விலகிச் செல்வேன்” என்று பதில் கூறினார். அப்பொழுது அப்பெண்”இதோ! அவன் தலை மதிலுக்கு அப்பால் உம்மிடம் தூக்கி எறியப்படும் என்றாள்.
22
மக்கள் அனைவரும் அவள் அணுகி அறிவார்த்த ஆலோசனை கூறினாள். அவர்களும் பிக்ரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்தார்கள். யோவாபு எக்காளம் ஊத. அவர்கள் நகரை விட்டு நீங்கித் தம் வீடுகளுக்குச் சென்றனர். யோவாபு எருசலேமுக்குத் திரும்பி அரசரிடம் சென்றார்.