21
இணங்குக இறைவனுக்கு: எய்துக அமைதி: அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.
22
அவர் வாயினின்று அறிவுரை பெறுக: அவர்தம் மொழிகளை உம் நெஞ்சில் பொறித்திடுக:
23
நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்: தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!
24
பொன்னைப் புழுதியிலே எறிந்து, ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!
25
எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.