நியாயாதிபதிகள் 16:18-21 - WCV
18
அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள்.எனவே அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு,”உடனே வாருங்கள்: அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார் என்ற ஆளனுப்பினாள்.பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர்.
19
அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள்.ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான்.அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது.எனவே அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்.
20
அவள்,”சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்!” என்று கத்தினாள்.அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து”முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன்” என்று சொன்னார்.ஏனெனில் ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார்என்பதை அவர் உணரவில்லை.
21
பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள்.அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர்.சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்திர்.