எரேமியா 31:15-20 - WCV
15
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது: ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்: ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்: ஏனெனில், அவருடைய குழந்தைகள் அவரோடு இல்லை.
16
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நீ அழுகையை நிறுத்து: கண்ணீர் வடிக்காதே: ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும், என்கிறார் ஆண்டவர். தங்கள் பகைவரின் நாட்டினின்று அவர்கள் திரும்பி வருவார்கள்.
17
உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை உண்டு, என்கிறார் ஆண்டவர். உன் பிள்ளைகள் தம் நாட்டுக்குத் திரும்புவர்.
18
எப்ராயிமின் புலம்பலை நான் உண்மையாகவே கேட்டேன்: “பணியாத இளம் காளையை அடித்துத் திருத்துவதுபோல நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்: நீர் என்னைத் திரும்ப அழைத்துச் செல்லும்: நானும் திரும்பி வரவேன்: ஏனெனில், என் கடவுளாகிய ஆண்டவர் நீரே.
19
உம்மை விட்டு விலகிச் சென்றபின் நான் மனம் வருந்தினேன்: பயிற்றுவிக்கப்பட்டபின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்: என் இளமையின் அவமானம் இன்னும் என்னிடம் காணப்பட்டது. நான் வெட்கித் தலை குனிந்தேன்.”
20
“எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா? நீ என் அன்புக் குழந்தை அல்லவா? உனக்கு எதிராக நான் அடிக்கடி பேசியபோதிலும், உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்: உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது: திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்” என்கிறார் ஆண்டவர்.