1உலகில் மனிதரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு தீங்கைக் கண்டேன்.பிரச 5:13 2கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும் மேன்மையையும் கொடுக்கிறார். ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை. அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார். இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன.பிரச 5:19 1இரா 3:13 1நாளா 29:25 1நாளா 29:28 2நாளா 1:11 தானி 5:18 3ஒருவருக்கு நூறு பிள்ளைகள் இருக்கலாம். அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம். அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும், தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும், இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால், அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன்.ஆதி 33:5 1சாமு 2:20 1சாமு 2:21 2இரா 10:1 1நாளா 28:5 2நாளா 11:21 எஸ்தர் 5:11 சங் 127:4 சங் 127:5 நீதி 17:6 4அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை. அது இருளில் மறைகிறது: அதன் பெயரை இருள் மூடிவிடும்.சங் 109:13 5அது கதிரவனைக் கண்டதுமில்லை: எதையும் அறிந்ததுமில்லை. ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது.யோபு 3:10-13 யோபு 14:1 சங் 58:8 சங் 90:7-9 6வாழ்கையில் இன்பம் துய்க்காமல் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர் கூட அதைவிட மேலானவர் இல்லை. ஏனெனில், இருவரும் ஒரே இடத்திற்கு செல்கின்றனர் அல்லவா?ஆதி 5:5 ஆதி 5:23 ஆதி 5:24 ஏசா 65:22 7வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்: ஆனால் அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை.ஆதி 3:17-19 நீதி 16:26 மத் 6:25 யோவா 6:27 1தீமோ 6:6-8 8இப்படியிருக்க, மதிகேடரைவிட ஞானமுள்ளவர் எவ்வகையில் மேலானவர்? அல்லது ஏழை ஒருவருக்கு மனிதர்முன் திறமையுடன் நடந்துகொள்ளத் தெரிந்திருந்தும், அதனால் அவருக்குப் பயனென்ன?பிரச 2:14-16 பிரச 5:11 9இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவரை விட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடியிருப்பதே மேல். ஆனால், இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.பிரச 2:24 பிரச 3:12 பிரச 3:13 பிரச 5:18 10இப்பொழுது நடக்கும் ஒவ்வொன்றும் நெடுங்காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகும். மனிதர் யாரென்று நமக்குத் தெரியும். தம்மைவிட வலிமை வாய்ந்தவருடன் வாதாட அவரால் இயலாது.பிரச 1:9-11 பிரச 3:15 11பேச்சு நீள நீள, அதன் பயன் குறைந்து கொண்டே போகும். அதனால் மனிதர் அடையும் நன்மை என்ன?பிரச 1:6-9 பிரச 1:17-9 பிரச 1:18-9 பிரச 2:3-11 பிரச 3:19 பிரச 4:1-4 பிரச 4:8-4 பிரச 4:16-4 பிரச 5:7 சங் 73:6 ஓசி 12:1 12மனிதருடைய வாழ்நாள் குறுகியது: பயனற்றது: நிழலைப்போல மறைவது. அதில் தமக்கு நலமானது எது என்பதை யாரால் அறியக் கூடும்? தம் மறைவிற்குப் பிறகு உலகில் என்ன நடக்கும் என்பதை யாரால் தெரிந்து கொள்ள இயலும்?பிரச 2:3 பிரச 12:13 சங் 4:6 சங் 16:5 சங் 17:15 சங் 47:4 புலம் 3:24-27 மீகா 6:8