ஆதியாகமம் 3:17-19 - WCV
17
அவர் மனிதனிடம், “உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது: உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.
18
முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும்.வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.
19
நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.நீ மண்ணாய் இருக்கிறாய்: மண்ணுக்கே திரும்புவாய்”என்றார்.