நீதிமொழிகள் 7:21-27 - WCV
21
இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்: நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள்.
22
உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்: வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,
23
கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில் தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.
24
ஆகையால் பிள்ளைகளே! எனக்குச் செவிகொடுங்கள்: நான் சொல்வதைக் கவனியுங்கள்.
25
உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்: மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள்.
26
அவள் பலரை குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்: வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள்.
27
அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி: சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.