மத்தேயு 15:2-9 - WCV
2
“ “உம்சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே “ என்றனர்.
3
அவர் அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்?
4
கடவுள், “ உன் தந்தையையும் தாயையும் மதித்து நட “ என்றும், “ தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் “ என்றும் உரைத்திருக்கிறார்.
5
ஆனால் நீங்கள், “ எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, “உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று “ என்றால்,
6
அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.
7
வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றிப் பொருத்தமாகவே எசாயா இறைவாக்கு உரைத்திருக்கிறார்.
8
அவர், “ இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது.
9
மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் “ என்கிறார் “ என்றார்.