| 1 | ஞானமுள்ளவருக்கு யார் நிகர்? உலகில் காண்பவற்றின் உட்பொருளை வேறு யாரால் அறிய இயலும்? ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்: அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும். | பிரச 2:13 பிரச 2:14 1கொரி 2:13-16 |
| 2 | கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி அரசனுக்கு அடங்கி நட. அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன். | நீதி 24:21 ரோம 13:1-4 தீத் 3:1 1பேது 2:13-17 |
| 3 | எனவே, அவன் முன்னிலையிலிருந்து பதற்றப்பட்டுப் போய்விடாதே. அவனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே. | பிரச 10:4 நீதி 14:29 |
| 4 | மன்னன் சொல்லுக்கு மறுசொல் இல்லை. எனவே, “ஏன் இப்படிச் செய்கிறீர்?” என்று அவனை யார் கேட்க முடியும்? | 1இரா 2:25 1இரா 2:29-34 1இரா 2:46-34 நீதி 19:12 நீதி 20:2 நீதி 30:31 தானி 3:15 லூக் 12:4 லூக் 12:5 ரோம 13:1-4 |
| 5 | அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது. அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும் வழியையும் ஞானமுள்ளவன் அறிவான். | பிரச 8:2 யாத் 1:17 யாத் 1:20 யாத் 1:21 சங் 119:6 ஓசி 5:11 லூக் 20:25 அப் 4:19 அப் 5:29 ரோம 13:5-7 1பேது 3:13 1பேது 3:14 |
| 6 | ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு: செய்யவேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்? | பிரச 3:1 பிரச 3:11 பிரச 3:17 பிரச 7:13 பிரச 7:14 |
| 7 | ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. | பிரச 6:12 பிரச 9:12 பிரச 10:14 நீதி 24:22 நீதி 29:1 மத் 24:44 மத் 24:50 மத் 25:6-13 1தெச 5:1-3 |
| 8 | அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது: பணம் கொடுத்தும் தப்ப முடியாது. | பிரச 3:21 2சாமு 14:14 யோபு 14:5 யோபு 34:14 சங் 49:6-9 சங் 89:48 எபிரெ 9:27 |
| 9 | உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது. | பிரச 1:14 பிரச 3:10 பிரச 4:7 பிரச 4:8 பிரச 7:25 |
| 10 | பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் வீணான செயலே. | 2இரா 9:34 2இரா 9:35 யோபு 21:18 யோபு 21:32 யோபு 21:33 லூக் 16:22 |
| 11 | மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம். | யாத் 8:15 யாத் 8:32 யோபு 21:11-15 சங் 10:6 சங் 50:21 சங் 50:22 ஏசா 5:18 ஏசா 5:19 ஏசா 26:10 ஏசா 57:11 எரே 48:11 மத் 24:49 மத் 24:50 ரோம 2:4 ரோம 2:5 2பேது 3:3-10 |
| 12 | பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால், | பிரச 5:16 பிரச 7:15 1இரா 2:5-9 1இரா 21:25 1இரா 22:34 1இரா 22:35 நீதி 13:21 ஏசா 65:20 ரோம 2:5 ரோம 9:22 2பேது 2:9 |
| 13 | தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்: நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை. | யோபு 18:5 யோபு 20:5 யோபு 21:30 சங் 11:5 ஏசா 57:21 மல்கி 3:18 மத் 13:49 மத் 13:50 யோவா 5:29 |
| 14 | வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன். | பிரச 4:4 பிரச 4:8 பிரச 9:3 பிரச 10:5 |
| 15 | எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே. | பிரச 2:24 பிரச 3:12 பிரச 3:13 பிரச 3:22 பிரச 5:18 பிரச 9:7-9 1தீமோ 4:3 1தீமோ 4:4 1தீமோ 6:17 |
| 16 | நான் ஞானத்தை அடையவும் உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை: ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும், கடவுளின் செயலை அவரலால் புரிந்துகொள்ள இயலாது. | பிரச 8:9 பிரச 8:7 பிரச 7:25 |
| 17 | மனிதர் எத்துணை முயன்றாலும் அவரால் அதைக் கண்டுகொள்ள இயலாது. ஞானமுள்ளவர்கள் அது தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கும் அது தெரியாது. | பிரச 3:11 பிரச 7:23 பிரச 7:24 பிரச 11:5 யோபு 5:9 யோபு 11:7-9 சங் 40:5 சங் 73:16 சங் 104:24 நீதி 30:3 நீதி 30:4 ஏசா 40:28 ரோம 11:33 |