| 1 | இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன். நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம், அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட, கடவுளின் கையிலேதான் இருக்கிறது. இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது. | பிரச 1:17 பிரச 7:25 பிரச 8:16 பிரச 12:9 பிரச 12:10 |
| 2 | விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்”பொல்லார்க்கு நேரிடும் விதிப்படியே நல்லார்க்கும் நேரிடும். நேர்ந்து கொள்ளத் தயங்குகிறவருக்கு நேரிடும் விதிப்படியே நேர்ந்து கொள்ளுகிறவருக்கும் நேரிடும். | பிரச 2:14-16 யோபு 21:7-34 சங் 73:3 மல்கி 3:15 |
| 3 | விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் நேரிடும். இதுவே உலகில் நடக்கிற அனைத்திலும் காணப்படுகிற தீமை. மேலும், மக்கள் உள்ளங்களில் தீமை நிறைந்திருக்கிறது. அவர்கள் உயிரோடிருக்கும் வரையில் அவர்கள் மனத்தில் மூடத்தனம் இருக்கிறது. திடீரென்று அவர்கள் இறந்து போகிறார்கள். | பிரச 8:11 ஆதி 6:5 ஆதி 8:21 யோபு 15:16 சங் 51:5 எரே 17:9 மத் 15:19 மத் 15:20 மாற் 7:21-23 ரோம 1:29-31 தீத் 3:3 |
| 4 | ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல். | யோபு 14:7-12 யோபு 27:8 ஏசா 38:18 புலம் 3:21 புலம் 3:22 லூக் 16:26-29 |
| 5 | ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்: ஆனால், இறந்தோரோ எதையும் அறியார். அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது: அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள். | பிரச 7:2 யோபு 30:23 எபிரெ 9:27 |
| 6 | அவர்களுக்கு அன்பு, பகைமை, பொறாமை எதுவும் இல்லை. இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும் அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை. | யாத் 1:8 யோபு 3:17 யோபு 3:18 சங் 146:3 சங் 146:4 நீதி 10:28 மத் 2:20 |
| 7 | ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு: களிப்புடனிரு: திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு: தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு. | ஆதி 12:19 மாற் 7:29 யோவா 4:50 |
| 8 | எப்போதும் நல்லாடை உடுத்து. தரையில் நறுமணத் தைலம் தடவிக்கொள். | 2சாமு 19:24 எஸ்தர் 8:15 வெளிப் 3:4 வெளிப் 3:5 வெளிப் 7:9 வெளிப் 7:13 வெளிப் 7:14 வெளிப் 16:15 வெளிப் 19:8 வெளிப் 19:14 |
| 9 | இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு. ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்டிற்கு ஈடாகக் கிடைப்பது இதுவே. | நீதி 5:18 நீதி 5:19 நீதி 18:22 நீதி 19:14 மல்கி 2:15 |
| 10 | நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்: அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை: சிந்தனை செய்வதுமில்லை: அறிவு பெறுவதுமில்லை: அங்கே ஞானமுமில்லை. | எண் 13:30 1நாளா 22:19 1நாளா 28:20 1நாளா 29:2 1நாளா 29:3 2நாளா 31:20 2நாளா 31:21 எஸ்றா 6:14 எஸ்றா 6:15 நெகே 2:12-20 நெகே 3:1-16 நெகே 4:2 நெகே 4:6 நெகே 4:9-13 நெகே 4:17-23 நெகே 13:8-31 சங் 71:15-18 எரே 29:13 மத் 6:33 யோவா 4:34 ரோம 12:11 ரோம 15:18-20 1கொரி 9:24 1கொரி 9:26 1கொரி 15:10 1கொரி 16:10 எபே 5:16 கொலோ 3:23 2பேது 1:12-15 |
| 11 | உலகில் வேறொன்றையும் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் வேளையும் வாய்ப்பும் செம்மையாய் அமையவேண்டும். | பிரச 2:12 பிரச 4:1 பிரச 4:4 மல்கி 3:18 |
| 12 | தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது. வலையில் அகப்படும் மீன்களைப்போலவும் கண்ணியில் சிக்கும் பறவைகளைப் போலவும் அவர் சிக்கிக்கொள்வார். எதிர்பாராத வகையில் அவருக்குக் கேடு காலம் வரும். | பிரச 8:5-7 பிரச 8:11-7 லூக் 19:42-44 2கொரி 6:2 1பேது 2:12 |
| 13 | நான் கண்ட வேறொன்றும் உண்டு: இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது. | பிரச 9:11 பிரச 6:1 பிரச 7:15 பிரச 8:16 |
| 14 | சிறிய நகர் ஒன்று இருந்தது. அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்: அதை முற்றுகையிட்டுத் தாக்கினான். | 2சாமு 20:15-22 2இரா 6:24-33 2இரா 7:1-20 |
| 15 | அந்நகரில் ஞானமுள்ளவன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் ஓர் ஏழை. அவன் தன் ஞானத்தால் நகரைக் காப்பாற்றியிருக்கக்கூடும். ஆயினும், அவனைப் பற்றி எவரும் நினைக்கவில்லை. | ஆதி 40:23 எஸ்தர் 6:2 எஸ்தர் 6:3 |
| 16 | வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது: அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை. | பிரச 9:18 பிரச 7:19 நீதி 21:22 நீதி 24:5 |
| 17 | மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன் முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவர் அடக்கமுடன் கூறுவதைக் கேட்பதே நன்று. | ஆதி 41:33-40 1சாமு 7:3-6 நீதி 28:23 ஏசா 42:2 ஏசா 42:4 யாக் 1:20 யாக் 3:17 யாக் 3:18 |
| 18 | போர்க் கருவிகளைவிட ஞானமே சிறந்தது. ஆனால் ஒரே ஒரு தவறு நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும். | யோசு 7:1 யோசு 7:5 யோசு 7:11 யோசு 7:12 யோசு 22:20 1சாமு 14:28 1சாமு 14:29 1சாமு 14:36-46 2சாமு 20:1 2சாமு 20:2 2தெச 2:8-12 2தீமோ 2:16-18 2தீமோ 3:8 2தீமோ 4:3 2தீமோ 4:4 தீத் 1:10 தீத் 1:11 எபிரெ 12:15 எபிரெ 12:16 |