9
நாங்களோ எங்கள் கடவுளை வேண்டினோம்: அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள, இரவும் பகலும் காவலர்களை அமர்த்தினோம்.
10
அப்பொழுது யூதா நாட்டினர், சுமப்போர் தளர்ந்து போயினர்: மண்மேடோ பெரிதாய் உள்ளது: மதில்களை நம்மால் கட்டிமுடிக்க இயலாது” என்றனர்.
11
எங்கள் எதிரிகளோ, “நாம் அவர்கள் நடுவே சென்று அவர்களைக் கொன்று, வேலையை நிறுத்தும்வரை, அவர்கள் இதை அறியாமலும், தெரியாமலும் இருக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டனர்.
12
அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமுறை வந்து எங்களிடம், “எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை எதிர்த்து வருகிறார்கள்” என்று அறிவித்தனர்.
13
எனவே மதிலுக்குப் பின்புறமாக மிகத் தாழ்வான பகுதியில் திறந்த வெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள், ஈட்டி, வில்களோடு நிறத்தி வைத்தேன்.