1கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடைநாற்றம் வீசும்படி செய்துவிடும். அதுபோல, சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும்.யாத் 30:34 யாத் 30:35 2தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும்: தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும்.பிரச 9:10 நீதி 14:8 லூக் 14:28-32 3மூடர் தெருவில் நடந்தாலே போதும்: அவரது மடமை வெளியாகிவிடும். தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டிடுவார்.பிரச 5:3 நீதி 13:16 நீதி 18:2 நீதி 18:6 1பேது 4:4 4மேலதிகாரி உன்னைச் சினந்து கொண்டால், வேலையை விட்டு விடாதே. நீ அடக்கமாயிருந்தால், பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.பிரச 8:3 5உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.பிரச 4:7 பிரச 5:13 பிரச 6:1 பிரச 9:3 6மூடர்களுக்கு உயர்த்த பதவி அளிக்கப்படுகிறது: செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.நியா 9:14-20 1இரா 12:13 1இரா 12:14 எஸ்தர் 3:1 சங் 12:8 நீதி 28:12 நீதி 28:28 7அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.நீதி 19:10 நீதி 30:22 8குழியை வெட்டுவோர் அதில் தாமே வீழ்வார். கன்னமிடுவோரைக் கட்டு விரியன் கடிக்கும்.நியா 9:5 நியா 9:53-57 2சாமு 17:23 2சாமு 18:15 எஸ்தர் 7:10 சங் 7:15 சங் 7:16 சங் 9:15 சங் 9:16 நீதி 26:27 9கற்களை வெட்டி எடுப்பவர் கற்களால் காயமடைவார். மரத்தை வெட்டுபவர் காயத்திற்கு ஆளாவார்.10மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலைசெய்வது மிகக் கடினமாயிருக்கும். ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.பிரச 10:15 பிரச 9:15-17 ஆதி 41:33-39 யாத் 18:19-23 1இரா 3:9 1நாளா 12:32 2நாளா 23:4-11 மத் 10:16 அப் 6:1-9 அப் 15:2-21 ரோம 16:19 1கொரி 14:20 எபே 5:15-17 கொலோ 4:5 யாக் 1:5 11பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை.சங் 58:4 சங் 58:5 எரே 8:17 12ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித்தரும். மூடரோ தம் வாயால் கெடுவார்.யோபு 4:3 யோபு 4:4 யோபு 16:5 சங் 37:30 சங் 40:9 சங் 40:10 சங் 71:15-18 நீதி 10:13 நீதி 10:20 நீதி 10:21 நீதி 10:31 நீதி 10:32 நீதி 12:13 நீதி 12:14 நீதி 12:18 நீதி 15:2 நீதி 15:23 நீதி 16:21-24 நீதி 22:17 நீதி 22:18 நீதி 25:11 நீதி 25:12 நீதி 31:26 மத் 12:35 லூக் 4:22 எபே 4:29 கொலோ 4:6 13அவரது பேச்சு மடமையில் தொடங்கும்: முழு பைத்தியத்தில் போய் முடியும்.நியா 14:15 1சாமு 20:26-33 1சாமு 22:7 1சாமு 22:8 1சாமு 22:16-18 1சாமு 25:10 1சாமு 25:11 2சாமு 19:41-43 2சாமு 20:1 2இரா 6:27 2இரா 6:31 நீதி 29:9 மத் 2:7 மத் 2:8 மத் 2:16 லூக் 6:2 லூக் 6:11 லூக் 11:38 லூக் 11:53 லூக் 11:54 யோவா 12:10 அப் 5:28-33 அப் 6:9-11 அப் 7:54-59 அப் 19:24-28 14மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்: என்ன பேசப்போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது.பிரச 5:3 நீதி 10:19 நீதி 15:2 15மூடர் அளவுமீறி உழைத்துத் தளர்ந்து போவார். ஊருக்குத் திரும்பிப்போகவும் வகை அறியார்.பிரச 10:3 பிரச 10:10 ஏசா 44:12-17 ஏசா 47:12 ஏசா 47:13 ஏசா 55:2 ஏசா 57:1 ஆபகூ 2:6 மத் 11:28-30 16சிறு பிள்ளையை அரசனாகவும் விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ கெட்டழிவாய்.2நாளா 13:7 2நாளா 33:1-20 2நாளா 36:2 2நாளா 36:5 2நாளா 36:9 2நாளா 36:11 ஏசா 3:4 ஏசா 3:5 ஏசா 3:12 17உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும் உரிய நேரத்தில் உண்பவர்களை, குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு இருப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.பிரச 10:6 பிரச 10:7 நீதி 28:2 நீதி 28:3 எரே 30:21 18சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்: பழுதுபார்க்காதவரின் வீடு இடிந்து விழும்.நீதி 12:24 நீதி 14:1 நீதி 20:4 நீதி 21:25 நீதி 23:21 நீதி 24:30 நீதி 24:31 எபிரெ 6:11 2பேது 1:5-10 19விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்: திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத்தரும்: பணம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும்.பிரச 2:1 பிரச 2:2 பிரச 7:2-6 ஆதி 43:34 தானி 5:1-12 1பேது 4:3 20தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே: படுக்கையறையிலுங்கூடச் செல்வர்களை இகழ்ந்து பேசாதே. வானத்துப் பறவைகள் நீ கூறியதை எடுத்துச்செல்லும்: பறந்து சென்று நீ சொன்னதைத் திரும்பச் சொல்லும்.யாத் 22:28 ஏசா 8:21 அப் 23:5