நியாயாதிபதிகள் 9:14-20 - WCV
14
மரங்கள் எல்லாம் முட்புதரிடம்,”வாரும், எங்களை அரசாளும்” என்றன.
15
முட்புதர் மரங்களிடம்,”உண்மையில், உங்கள் மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்: என் நிழலில் அடைக்கலம் புகங்கள்: இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும்” என்றது.
16
இப்பொழுது நீங்கள் அபிமெலக்கை அரசனாக்கியிருக்கிறீர்களே! உண்மையுடனும் நேர்மையுடனுமா இதைச் செய்தீர்கள்? நீங்கள் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லதா செய்திருக்கிறீர்கள்? அவரது செயலுக்கேற்பவா நீங்கள் அவருக்குக் கைம்மாறு செய்திருக்கிறீர்கள்?
17
என் தந்தை உங்களுக்காகப் போரிட்டார்: தம் உயிரைப் பணயம் வைத்தார்: உங்களை மிதியானியர் கையிலிருந்து விடுவித்தார்.
18
இன்று நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராக எழுந்து, அவருடைய புதல்வர் எழுபது பேரை ஒரே கல்லின் மேல் வைத்துக் கொன்றீர்கள்.அவருடைய வேலைக்காரியின் மகன் அபிமெலக்கைச் செக்கேமின் குடிமக்களுக்கு அரசனாக்கினீர்கள்.
19
இதை உண்மையுடனும் நேர்மையுடனும் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் இந்நாளில் செய்திருந்தால், நீங்கள் அபிமெலக்கைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்.அவனும், உங்களைக் குறித்து மகிழ்ச்சி அடைவான்.
20
இல்லையேல், அபிமெலக்கிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து, செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களை எரித்தழிக்கட்டும்! செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து அபிமெலக்கை எரித்தழிக்கட்டும்!” என்றார்.