பின் எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்த போது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை: என்மேல் மனமிரங்கி அதை எனக்கு தெரிவிக்க உங்களில் ஒருவனும் வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கு எதிராகத் தூண்டிவிட்டான் என்றான்.