2சாமுவேல் 19:41-43 - WCV
41
உடனே இஸ்ரயேல் அனைவரும் அரசரிடம் வந்து,”எங்கள் சகோதர்களான யூதாவினர் அரசரையும் அவர் வீட்டாரையும் அவர் ஆள்கள் அனைவரையும் திருட்டுத்தனமாக் கொண்டு வந்து யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்? என்று கேட்டார்கள்.
42
யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலுக்கு மறுமொழியாக,”அரசர் எங்களுக்கு நெருங்கியவர். இக்காரியத்தைப்பற்றி நீங்கள் சினமுறுவது ஏன்? நாங்கள் அரசரிடம் ஏதாவது உண்டோமா? அவரிடமிருந்து நாங்கள் ஏதாவது பெற்றுக்கொண்டோமா? என்றார்கள்.
43
இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி,”எங்களுக்கு அரசரிடம் பத்து பங்குகள் உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகிறீர்? எங்கள் அரசரை திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா? என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினர் பேச்சு கடுமையாக இருந்தது.