1உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய்: ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.உபா 15:7-11 நீதி 11:24 நீதி 11:25 நீதி 22:9 ஏசா 32:8 2உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு இடங்களில் முதலாக வை. ஏனெனில், எங்கு, எவ்வகையான இடர் நேருமென்பதை நீ அறிய இயலாது.நெகே 8:10 எஸ்தர் 9:19 எஸ்தர் 9:22 சங் 112:9 லூக் 6:30-35 1தீமோ 6:18 1தீமோ 6:19 3வானத்தில் கார்முகில் திரண்டு வருமாயின், ஞாலத்தில் மழை பெய்யும். மரம் வடக்கு நோக்கி விழுந்தாலும் தெற்கு நோக்கி விழுந்தாலும் விழுந்த இடத்திலேதான் கிடக்கும்.1இரா 18:45 சங் 65:9-13 ஏசா 55:10 ஏசா 55:11 1யோவா 3:17 4காற்று தக்கவாறு இல்லையென்று காத்துக்கொண்டே இருப்போர், விதை விதைப்பதில்லை: வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக்கொண்டே இருப்போர் அறுவடை செய்வதில்லை.நீதி 3:27 நீதி 20:4 நீதி 22:13 5காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது: அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறியமுடியாது.யோவா 3:8 6காலையில் விதையைத் தெளி: மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.பிரச 9:10 ஏசா 55:10 ஓசி 10:12 மாற் 4:26-29 யோவா 4:36-38 2கொரி 9:6 2தீமோ 4:2 7ஒளி மகிழ்ச்சியூட்டும்: கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.யோபு 33:28 யோபு 33:30 சங் 56:13 நீதி 15:30 நீதி 29:13 8மனிதன் எத்தணை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதையும் அவன் மறக்கலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே.பிரச 6:6 பிரச 8:12 9இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்: கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.1இரா 18:27 1இரா 22:15 லூக் 15:12 லூக் 15:13 10மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்: குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.பிரச 12:1 யோபு 13:26 சங் 25:7 2பேது 3:11-14