9
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது: அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது: நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.
10
அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்: அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்: அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.
11
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்: உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
12
பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன: குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.
13
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன: பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன. அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!