3
இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: “நீங்கள் முழுஉள்ளத்தோடு.ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார்.
4
இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.
5
மேலும் சாமுவேல், “இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன் “ என்றார்.
6
ஆகவே அவர்க்ள மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து “ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம் “ என்று அறிக்கையிட்டார். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.