நெகேமியா 4:17-23 - WCV
17
மதில் கட்டுவோரும், சுமை சுமப்பவரும் ஒரு கையால் வேலை செய்தனர்: மறு கையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்.
18
கட்டுவோர் ஒவ்வொருவரும் தம் வாளை இடையில் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். எக்காளம் ஊதுபவன் என் அருகிலேயே இருந்தான்.
19
பிறகு நான் தலைவர்களையும், அலுவலர்களையும் ஏனைய மக்களையும் நோக்கிக் கூறியது: “வேலை மிகுந்துள்ளது: பரந்துள்ளது: நாமோ மதில்நெடுகத் தனித்தனியே சிதறி நிற்கின்றோம்.
20
எந்த இடத்திலிருந்து எக்காள முழக்கம் கேட்குமோ, அந்த இடத்திற்கு எங்களிடம் ஒன்று கூடி வாருங்கள். நம் கடவுள் நமக்காகப் போர் புரிவார்”.
21
இவ்வாறு நாங்கள் வேலை செய்துவந்தோம். எங்களுள் பாதிப்போர் அதிகாலைமுதல் விண்மீன்கள் தோன்றும்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர்.
22
அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது: “ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர்”:
23
நான், என் சகோதரர், என் ஊழியர், என் மெய்க்காவலர் யாருமே எம் உடைகளைக் களையவேயில்லை. ஒவ்வொருவரும் வலக்கையில் ஆயுதம் தாங்கியிருந்தோம்.