11
மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை வெளியனுப்புகின்றனர்: அவர்களின் குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.
12
அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப் பாடுகின்றனர்: குழல் ஊதி மகிழ்ந்திருக்கின்றனர்.
13
அவர்கள் மகிழ்வில் தம் நாள்களைக் கழிக்கின்றனர்: அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.
14
அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்: 'எம்மை விட்டு அகலும்: ஏனெனில், உமது வழிகளை அறிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை:'
15
எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய? அவரை நோக்கி நாங்கள் மன்றாடுவதால் என்ன பயன்?