ரோமர் 13:5-7 - WCV
5
ஆகவே கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, மனச்சாற்றின் பொருட்டும் நீங்கள் பணிந்திருத்தல் வேண்டும்.
6
இதற்காகவே நீங்கள் வரிசெலுத்துகிறீர்கள். அவர்கள் தங்கள் பணியை ஆற்றும் போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள்.
7
ஆகையால் அனைவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்குத் தலைவரியையும் சுங்கவரி செலுத்த வேண்டியோருக்குச் சுங்க வரியையும் செலுத்துங்கள்: அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள்: மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.