1சண்டை நடக்கும் வீட்டில் விருந்துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்.நீதி 15:17 சங் 37:16 2முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்டவனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்: ஏனைய சகோதரர்களோடு உரிமைச் சொத்தில் பங்கு பெறுவான்.நீதி 11:29 நீதி 14:35 ஆதி 24:4-67 பிரச 4:13 3வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்: உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்.நீதி 27:21 சங் 26:2 சங் 66:10 ஏசா 48:10 எரே 17:10 சகரி 13:9 மல்கி 3:2 மல்கி 3:3 1பேது 1:7 வெளிப் 2:23 4தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்: அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.நீதி 28:4 1சாமு 22:7-11 1இரா 22:6-28 ஏசா 30:10 எரே 5:31 2தீமோ 4:3 2தீமோ 4:4 1யோவா 4:5 வெளிப் 13:3-8 5ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்: பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.நீதி 14:21 நீதி 14:31 சங் 69:9 1யோவா 3:17 6முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர்கள்: பிள்ளகைளின் பெருமை அவர்கள் தந்தையரே.ஆதி 50:23 யோபு 42:16 யோபு 42:17 சங் 127:3-5 சங் 128:3-6 7பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை: பொய்யான பேச்சும் அரசனுக்குப் பொருந்தவே பொருந்தாது.நீதி 26:7 சங் 50:16 சங் 50:17 மத் 7:5 8கைகூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போலப் பயன்படுத்துகிறார்: அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்.நீதி 17:23 சங் 18:16 சங் 19:6 சங் 21:13 சங் 29:4 யாத் 23:8 உபா 16:19 9குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடுகிறவர்: குற்றத்தைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்டுகிறவன் நட்பை முறிப்பான்.நீதி 10:12 சங் 32:1 1பேது 4:8 10சொரணை கெட்டவனுக்கு நூறு அடி கொடுப்பதைவிட உணர்வுள்ளவருக்கு ஒரு சொல் சொல்வது மிகுந்த பயனைத் தரும்.நீதி 9:8 நீதி 9:9 நீதி 13:1 நீதி 15:5 நீதி 19:25 நீதி 27:22 நீதி 29:19 சங் 141:5 வெளிப் 3:19 11தீயவர் கலகம் செய்வதையே நாடுவர்: அவர்களை அழிக்கக் கொடிய தூதர் அனுப்பப்படுவார்.2சாமு 15:12 2சாமு 16:5-9 2சாமு 18:15 2சாமு 18:19 2சாமு 20:1 2சாமு 20:22 1இரா 2:24 1இரா 2:25 1இரா 2:31 1இரா 2:46 மத் 21:41 மத் 22:7 லூக் 19:27 12மடமையில் மூழ்கிக் கிடக்கும் மதிகேடனுக்கு எதிர்ப்படுவது, குட்டியைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவதைவிடக் கேடானது.நீதி 28:15 2சாமு 17:8 2இரா 2:24 ஓசி 13:8 13நன்மை செய்தவருக்கு எவர் தீமை செய்கிறாரோ, அவர் வீட்டை விட்டுத் தீமை அகலாது.1சாமு 24:17 1சாமு 31:2 1சாமு 31:3 2சாமு 21:1-14 சங் 35:12 சங் 38:20 சங் 55:12-15 சங் 109:4-13 எரே 18:20 எரே 18:21 மத் 27:5 மத் 27:25 ரோம 12:17 1தெச 5:15 1பேது 3:9 14வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்: வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு.நீதி 17:19 நீதி 26:21 நீதி 29:22 நியா 12:1-6 2சாமு 2:14-17 2சாமு 19:41-43 2சாமு 20:1-22 2நாளா 10:14-16 2நாளா 13:17 2நாளா 25:17-24 2நாளா 28:6 15குற்றம் செய்தவரை நேர்மையானவரைன்றும் நேர்மையானவரைக் குற்றம் செய்தவரென்றும் தீர்ப்புக் கூறுகிறவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.நீதி 24:23 நீதி 24:24 யாத் 23:7 1இரா 21:13 ஏசா 5:23 ஏசா 55:8 ஏசா 55:9 எசே 22:27-29 ஆமோ 5:7 ஆமோ 5:12 ஆமோ 6:12 லூக் 23:18-25 ரோம 4:5 யாக் 5:6 16மதிகேடர் கையில் பணம் இருப்பதால் பயனென்ன? ஞானத்தைப் பெற்றுக்கொள்ளச் செலவிடுவாரா? அவருக்குத் தான் மனமில்லையே!நீதி 1:22 நீதி 1:23 நீதி 8:4 நீதி 8:5 நீதி 9:4-6 ஏசா 55:1-3 அப் 13:46 2கொரி 6:1 17நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்: இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.நீதி 18:24 நீதி 19:7 ரூத் 1:16 1சாமு 18:3 1சாமு 19:2 1சாமு 20:17 1சாமு 23:16 2சாமு 1:26 2சாமு 9:1-13 எஸ்தர் 4:14 யோவா 15:13 யோவா 15:14 எபிரெ 2:11 18அடுத்தவர் கடனுக்காகப் பொறுப்பேற்று, அவருக்காகப் பிணையாய் நிற்பவன் அறிவில்லாதவனே.நீதி 6:1-5 நீதி 11:15 நீதி 20:16 நீதி 22:16 நீதி 22:27 19வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்: இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.நீதி 17:14 நீதி 29:9 நீதி 29:22 2கொரி 12:20 யாக் 1:20 யாக் 3:14-16 20கோணல் மதியுள்ளவர் நன்மையைக் காணார்: வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்.நீதி 3:32 நீதி 6:12-15 நீதி 8:13 சங் 18:26 21மதிகேடனைப் பெற்றவர் கவலைக்குள்ளாவார்: மூடருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.நீதி 17:25 நீதி 10:1 நீதி 15:20 நீதி 19:13 ஆதி 26:34 1சாமு 2:32-35 1சாமு 8:3 2சாமு 18:33 22மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து: வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்.நீதி 12:25 நீதி 15:13 நீதி 18:14 பிரச 9:7-9 ரோம 5:2-5 23கயவர் மறைவாகக் கைக்கூலி வாங்கிக்கொண்டு, நியாயத்தின் போக்கையே மாற்றிவிடுவார்.நீதி 17:8 நீதி 18:16 நீதி 21:14 யாத் 23:8 உபா 16:19 1சாமு 8:3 1சாமு 12:3 ஏசா 1:23 எசே 22:12 மீகா 7:3 மாற் 14:10 மாற் 14:11 24உணர்வுள்ளவர் ஞானத்திலேயே கண்ணாயிருப்பார்: மதிகேடரின் கவனமோ நாற்புறமும் அலையும்.நீதி 14:6 நீதி 15:14 பிரச 2:14 பிரச 8:1 யோவா 7:17 25மதிகெட்ட மகனால் தந்தைக்குக் கவலை: பெற்ற தாய்க்குத் துயரம்.நீதி 10:1 நீதி 15:20 நீதி 19:13 2சாமு 13:1-22 பிரச 2:18 பிரச 2:19 26நேர்மையானவருக்கு அபராதம் விதிப்பதும் நன்றல்ல: மேன்மக்களுக்குக் கசையடி கொடுப்பதும் முறையல்ல.நீதி 17:15 நீதி 18:5 ஆதி 18:25 27தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி: தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்பவரே மெய்யறிவாளர்.நீதி 10:19 நீதி 15:28 யாக் 1:19 யாக் 3:2 28பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்: தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.நீதி 15:2 யோபு 13:5 பிரச 5:3 பிரச 10:3 பிரச 10:14