12
என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல: அப்படியிருந்தால் பொறுத்துக் கொள்வேன்: எனக்கெதிராயத் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல: அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக் கொள்வேன்.
13
ஆனால், அவன் வேறு யாரும் அல்ல: என் தோழனாகிய நீயே: என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.
14
நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்: கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்:
15
என் எதிரிகளுக்குத் திடீரெனச் சாவு வரட்டும்: அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கட்டும்: ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில் அவர்கள் நடுவிலேயே தீமை புகுந்து விட்டது.