2சாமுவேல் 16:5-9 - WCV
5
தாவீது பகூரிம் வந்தபோது சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவனை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான்.
6
அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும் எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள்மீதும் கல்லெறிந்தான்.
7
சிமயி பழித்துக் கூறியது: இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!.
8
நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் என்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்”.
9
அப்போது செரூயவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து,”இச்செத்த நாய் என் தலைவராம் அரசைப் பழிப்பதா? இதோ நான் சென்று தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதிதாரும்” என்றான்.