1
பின்னர் நிகழ்ந்தது: தாவீதின் மகன் அப்சலோமிற்குத் தாமார் என்ற சகோதரி இருந்தாள். அவள் பேரழகி. தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் அவள் மீது மோகம் கொண்டிருந்தான்.
2
அம்மோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால். அவளிடம் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
3
அம்மோனுக்கு யோனத்தாபு என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் தாவீதின் சகோதரனான சிமயியின் மகன் யோனத்தாபு சூழ்ச்சி மிக்கவன்.
4
“இளவரசே!நீர் நாளுக்கு நாள் சோர்ந்து போவதேன்? என்னிடம் சொல்லமாட்டீரா? என்று கேட்க, அதற்கு அம்மோன்,”என் சகோதரன் அப்சலோமின் சகோதரி மீது நான் மையல் கொண்டுள்ளேன்” என்று அவனிடம் கூறினான்.
5
யோனத்தாபு அவனிடம்,”உம் படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர் போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும். என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன் எனச் சொல்லும் என்று யோத்தாபு அவனுக்கு ஆலோசனைக் கூறினார்.
6
அவ்வாறே இம்மோன் படுத்துக் கொண்டு நோயுற்றவன் போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காண வந்தபோது, அம்மோன் அவரிடம், தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள், அவள் என் கண்முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன்”எனக் கூறினான்.
7
தாவீது வீட்டுக்கு ஆளனுப்பி தாமாரை வரச்சொல்லி,”உடனே உன் சகோதரன் அம்மோன் வீட்டுக்குச் சென்று அவனுக்கு உணவு தயார் செய்” என்றார்.
8
தாமார் தன் சகோதரன் அம்மோன் வீட்டுக்குச் சென்றாள். அவனோ படுத்திருந்தான். அவள் மாவு எடுத்து அவன் கண்முன்னே பணியாரங்கள் சுட்டாள்.
9
பிறகு அவள் பாத்திரத்தைக்கொண்டு வந்து அவனுக்குப் பரிமாறினாள். அவன் உண்ண மறுத்தான். எல்லாரையும் என்னிடமிருந்து போகச் சொல்” என்று அம்மோன் கேட்க, எல்லோரும் அவனை விட்டுச் சென்றனர்.
10
”உணவை உள்ளறைக்குக் கொண்டுவா. நான் உன் கையிலிருந்து உண்பேன்” என்று அம்மோன் தாமாரிடம் கூறினான். தாமார் சுட்ட பணியாரங்களை எடுத்துக் கொண்டு தன் சகோதரன் அம்மோனிடம் படுக்கையறைக்குள் சென்றாள்.
11
அவன் உண்பதற்காக அவற்றை எடுத்துக் கொண்டு அவனருகே சென்ற போது அவன் அவளை பிடித்து இழுத்து,”என் சகோதரியே! வா என்னோடு படு என்றான்”
12
வேண்டாம் சகோதரனே! என்னைக் கட்டாயப் படுத்த வேண்டாம். ஏனெனில் இஸ்ரயேலில் இவ்வாறு நடப்பதில்லை. இந்த மடமையைச் செய்யாதே.
13
எனது அவமானத்தை நான் எப்படி போக்குவேன்? நீயும் இஸ்ரயேலில் மதிக் கெட்ட ஒருவனாய் இருப்பாய். தயைகூர்ந்து அரசரிடமே கேள். அவர் என்னை உனக்குக் கொடுக்க மறுக்க மாட்டார்” என்று அவளிடம் கெஞ்சினாள்.
14
அவனோ அவளது குரலுக்கு செவிகொடுக்கவில்லை. அவளை விட வலிமைமிக்கவனாக இருந்ததால், அவன் அவளை கற்பழித்தான்.
15
அதன் பிறகு அம்மோன் அவளை மிகவும் அதிகமாக வெறுத்தான். அவன் எந்த அளவுக்கு அவள் மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த அளவுக்கு மிகுதியாக அவளை வெறுத்து,”எழுந்து சென்று விடு” என்று அவளிடம் கூறினான்.
16
அவளோ,”வேண்டாம், என்னை அனுப்பிவிடும் கொடுமை, நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையை விடவும் மோசமானது” என்று கதறினாள். ஆனால் அவன் அவளுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை.
17
தனக்குப் பணிவிடை செய்து வந்த இளைஞனை அவன் அழைத்து,”இந்தப் பெண்ணை என்னிடமிருந்து வெளியேற்று: அவள் சென்றதும் கதவைத் தாழிடு”என்று கூறினான்.
18
பணியாளன் அவளை வெளியேற்றி, அவள் சென்றதும் கதவைத் தாழிட்டான். கன்னியராக இருந்த அரச மகளிரின் வழக்கப்படி அவள் பல்வண்ண, நீண்ட ஆடை அணிந்திருந்தாள்.
19
தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினான்: தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்: தன் தலை மீது கைவைத்து அழுதுக் கொண்டே சென்றாள்.
20
அப்பொழுது அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம்,”இதை எனக்குச் செய்தது அம்னோனா? என் சகோதரி! இப்போது நீ அமைதியாய் இரு. அவன் என் சகோதரன்! இதை மனதில் வைக்காதே”என்று கூறினான். தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் ஆறுதலின்றி வாழ்ந்தாள்.
21
நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார்.
22
அப்சலோம் அம்னோனுடன் நல்லதோ தீயதோ ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் தன் சகோதரி தாமாரைக் கற்பழித்ததற்காக அப்சலோம் அம்னோனை வெறுத்தாள்.