இணை வசன வேதாகமம்

Click to Subscribe

நீதிமொழிகள் 18

                   
புத்தகங்களைக் காட்டு
1பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்: பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.யாத் 33:16 சகரி 7:3 ரோம 1:1 2கொரி 6:17 யூதா 1:19
2மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்: தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.நீதி 1:7 நீதி 1:22 நீதி 17:16 சங் 1:1 சங் 1:2 மத் 8:34 1கொரி 8:1
3கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்: மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார்.நீதி 11:2 நீதி 22:10 நீதி 29:16 1சாமு 20:30 நெகே 4:4 சங் 69:9 சங் 69:20 சங் 123:3 சங் 123:4 மத் 27:39-44 1பேது 4:4 1பேது 4:14
4மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன்றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.நீதி 10:11 நீதி 13:14 நீதி 16:22 நீதி 20:5 மத் 12:34 யோவா 4:14 யோவா 7:38 யோவா 7:39 கொலோ 3:16 கொலோ 4:6
5பொல்லாருக்குக் கருணை காட்டுவது முறையல்ல: நேர்மையானவருக்கு நீதி கிடைக்காமல் தடுப்பது நேரியதல்ல.நீதி 24:23 நீதி 28:21 லேவி 19:15 உபா 1:16 உபா 1:17 உபா 16:19 யோபு 13:7 யோபு 13:8 யோபு 34:19 மத் 22:16
6மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்குவாதம் பிறக்கும்: அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும்.நீதி 12:16 நீதி 13:10 நீதி 14:16 நீதி 16:27 நீதி 16:28 நீதி 17:14 நீதி 20:3 நீதி 27:3
7மதிகேடர் தம் வாயால் அழிவார்: அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்.நீதி 10:8 நீதி 10:14 நீதி 12:13 நீதி 13:3 பிரச 10:11-14
8புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்: அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.நீதி 12:18 நீதி 16:28 நீதி 26:20-22 லேவி 19:16 சங் 52:2 சங் 64:3 சங் 64:4
9தன் வேலையில் சோம்பலடைகிறவன் அழிவை உண்டாக்குகிறவருக்கு உடன் பிறந்தவன்.நீதி 10:4 நீதி 23:20 நீதி 23:21 நீதி 24:30-34 மத் 25:26 ரோம 12:11 எபிரெ 6:12
10ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை: அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்.ஆதி 17:1 யாத் 3:13-15 யாத் 6:3 யாத் 34:5-7 ஏசா 9:6 ஏசா 57:15 எரே 23:6 மத் 1:23 வெளிப் 1:8
11செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார்.நீதி 10:15 நீதி 11:4 உபா 32:31 யோபு 31:24 யோபு 31:25 சங் 49:6-9 சங் 52:5-7 சங் 62:10 சங் 62:11 பிரச 7:12 லூக் 12:19-21
12முதலில் வருவது இறுமாப்பு: அதனை அடுத்து வருவது அழிவு: மேன்மை அடையத் தாழ்மையே வழி.நீதி 11:2 நீதி 16:18 நீதி 29:23 எசே 16:49 எசே 16:50 எசே 28:2 எசே 28:9 தானி 5:23 தானி 5:24 அப் 12:21-23
13வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர்களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.உபா 13:14 2சாமு 16:4 2சாமு 19:24-30 எஸ்தர் 3:10-15 எஸ்தர் 8:5-17 யோபு 29:16 தானி 6:9 தானி 6:14 யோவா 7:51
14மன வலிமை நோயைத் தாங்கிக்கொள்ளும்: மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?யோபு 1:20 யோபு 1:21 யோபு 2:7-10 சங் 147:3 ரோம 5:3-5 ரோம 8:35-37 2கொரி 1:12 2கொரி 12:9 2கொரி 12:10 யாக் 1:2 1பேது 1:6
15உணர்வுள்ளவர் மனம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்: ஞானமுள்ளவர் செவி அறிவுபெறுவதில் நாட்டங்கொள்ளும்.நீதி 1:5 நீதி 4:5 நீதி 4:7 நீதி 9:9 நீதி 10:14 நீதி 15:14 நீதி 23:23 1இரா 3:9 சங் 119:97-104 லூக் 8:8-10 லூக் 10:39 2தீமோ 3:15-17 யாக் 1:5
16ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும், அவரைப் பெரியோர்முன் கொண்டு போய்ச் சேர்க்கும்.நீதி 17:8 நீதி 19:6 நீதி 21:14 ஆதி 32:20 ஆதி 33:10 ஆதி 43:11 1சாமு 25:27
17வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்.நீதி 18:13 2சாமு 16:1-3 2சாமு 19:24-27 அப் 24:5 அப் 24:6 அப் 24:12 அப் 24:13
18திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்: வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.நீதி 16:33 யோசு 14:2 1சாமு 10:21-27 1சாமு 14:42 1நாளா 6:63 1நாளா 24:31 நெகே 11:1
19உன் இனத்தானுக்கு உதவி செய், அவன் உனக்கு அரணாயிருப்பான்: அவனோடு நீ சண்டையிட்டால் அவன் கதவைத் தாழிட்டுக் கொள்வான்.நீதி 6:19 ஆதி 4:5-8 ஆதி 27:41-45 ஆதி 32:6-11 ஆதி 37:3-5 ஆதி 37:11-5 ஆதி 37:18-27 2சாமு 13:22 2சாமு 13:28 1இரா 2:23-25 1இரா 12:16 2நாளா 13:17 அப் 15:39
20ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்: தம் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும்.நீதி 12:13 நீதி 12:14 நீதி 13:2 நீதி 22:18 நீதி 22:21 நீதி 25:11 நீதி 25:12
21வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே: வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.நீதி 18:4-7 நீதி 10:20 நீதி 10:21 நீதி 10:31 நீதி 11:30 மத் 12:35-37 ரோம 10:14 ரோம 10:15 2கொரி 2:16 2கொரி 11:15 எபே 4:29 கொலோ 4:6 தீத் 1:10 தீத் 1:11 யாக் 3:6-9 2பேது 2:18
22மனைவியை அடைகிறவன் நலமடைவான்: அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்.நீதி 5:15-23 நீதி 12:4 நீதி 19:14 நீதி 31:10-31 ஆதி 24:67 ஆதி 29:20 ஆதி 29:21 ஆதி 29:28 பிரச 9:9 ஓசி 12:12 1கொரி 7:2
23ஏழை கெஞ்சிக் கேட்பார்: செல்வரோ கடுகடுப்புடன் மறுமொழி கொடுப்பார்.ரூத் 2:7 1சாமு 2:36 2இரா 4:1 2இரா 4:2 ஏசா 66:2 மத் 5:3 யாக் 1:9-11
24கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு: உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.நீதி 17:17 நீதி 27:9 1சாமு 19:4 1சாமு 19:5 1சாமு 30:26-31 2சாமு 9:1-13 2சாமு 16:17 2சாமு 17:27-29 2சாமு 19:30-39 2சாமு 21:7 1நாளா 12:38-40 மத் 26:49 மத் 26:50
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.