2சாமுவேல் 2:14-17 - WCV
14
இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள் போர் செய்யட்டும் என்று அப்னேர் யோவாபிடம் கூறினார்.”அவர்கள் அவ்வாறே செய்யட்டும்”என்று யோவாபு கூறினான்.
15
பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளர் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.
16
ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம் என்று அழைத்தனர்.
17
போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது, அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர்.