நியாயாதிபதிகள் 12:1-6 - WCV
1
எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம்,”எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்?” என்று கேட்டனர்.உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம்” என்றனர்.
2
இப்தா அவர்களிடம்,”அம்மோனியருடன் எனக்கும் என் மக்களுக்கும் பெரும் சச்சரவு ஏற்பட்டபோது, நான் உங்களை உதவிக்கு அழைத்தேன்.நீங்கள் என்னை அவர்கள் கையிலிருந்து விடுவிக்கவில்லை.
3
நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன்.ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார்.இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்?” என்று கேட்டார்.
4
இப்தா கிலயாதின் எல்லா ஆள்களையும் ஒன்று திரட்டி, எப்ராயிமுக்கு எதிராகப் போரிட்டார்.கிலயாதியர் எப்ராயிம் மக்களைக் கொன்றனர்.ஏனெனில் அவர்கள்,”கிலயாதியரே! எப்ராயிமுக்கும் மனாசேக்கும் இடையில் வாழும் நீங்கள் எப்ராயிமிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள்” என்று பழித்துரைத்திருந்தனர்.
5
கிலயாதியர் எப்ராயிமுக்க உரிய யோர்தானின் தொங்கு பாலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.எப்ராயிமிலிருந்து தப்பி ஓடிவந்தவர்களுள் ஒருவன்,”நான் கடந்து செல்கிறேன்” என்று சொன்னால், கிலயாதியர் அவனிடம்,”நீ எப்ராயிமைச் சார்ந்தவனா?” என்று கேட்பர்.அவன்”இல்லை” எனச் சொன்னால்,
6
அவர்கள் அவனிடம்,”ஷிபோலத்து” என்று சொல்” என்பர்.அவன்”சிபோலத்து” என்பான்.அவ்வார்த்தையை அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. உடனே அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் வழித்தடங்களில் கொல்வர்.இவ்வாறு அவர்கள் எப்ராயிம் மக்களில் நாற்பத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.