நீதிமொழிகள் 6:1-5 - WCV
1
பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,
2
அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,
3
பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்: நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.
4
அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே: கண் இமைகளை மூடவிடாதே.
5
நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்: கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்: உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.