1எண்ணங்களை மனிதர் எண்ணலாம்: ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.நீதி 16:9 நீதி 19:21 நீதி 20:24 நீதி 21:1 2நாளா 18:31 எஸ்றா 7:27 நெகே 1:11 சங் 10:17 சங் 119:36 எரே 10:23 எரே 32:39 எரே 32:40 எசே 36:26 எசே 36:27 2கொரி 8:16 பிலிப் 2:13 யாக் 1:16-18 2மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்: ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.நீதி 16:25 நீதி 21:2 நீதி 30:12 1சாமு 15:13 1சாமு 15:14 சங் 36:2 எரே 2:22 எரே 2:23 லூக் 18:9-11 ரோம 7:7-9 3உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை: அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.யோபு 5:8 சங் 37:4 சங் 37:5 சங் 55:22 மத் 6:25-34 லூக் 12:22 பிலிப் 4:6 1பேது 5:7 4ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு: பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.ஏசா 43:7 ஏசா 43:21 ரோம 11:36 வெளிப் 4:11 5இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்: அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்: இது உறுதி.நீதி 6:16 நீதி 6:17 நீதி 8:13 யோபு 40:12 யாக் 4:6 6அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.நீதி 20:28 சங் 85:10 தானி 4:27 மீகா 7:18-20 லூக் 11:41 யோவா 15:2 அப் 15:9 1பேது 1:22 7ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.சங் 69:31 ரோம 8:31 பிலிப் 4:18 கொலோ 1:10 கொலோ 3:20 எபிரெ 13:21 1யோவா 3:22 8தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.நீதி 15:16 சங் 37:16 1தீமோ 6:6-9 9மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்: ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.நீதி 16:1 நீதி 19:21 நீதி 20:24 நீதி 21:30 சங் 37:23 ஏசா 46:10 எரே 10:23 10அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது: தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.நீதி 16:12 நீதி 16:13 ஆதி 44:5 ஆதி 44:15 உபா 17:18-20 2சாமு 23:3 2சாமு 23:4 சங் 45:6 சங் 45:7 சங் 72:1-4 சங் 99:4 ஏசா 32:1 ஏசா 32:2 எரே 23:5 எரே 23:6 11நிறைகோலும் துலாக்கோலும் ஆண்டவருக்கே உரியன: பையிலுள்ள எடைக்கற்களெல்லாம் அவரால் உண்டானவை.நீதி 11:1 நீதி 20:10 நீதி 20:23 லேவி 19:35 லேவி 19:36 உபா 25:13-15 எசே 45:10 ஓசி 12:7 ஆமோ 8:5 மீகா 6:11 12தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்: ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.நீதி 28:9 உபா 25:16 லூக் 12:48 13நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்: நேரியவற்றசை சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.நீதி 14:35 நீதி 22:11 சங் 101:5-7 14அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது: ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.நீதி 19:12 நீதி 20:2 தானி 3:13-25 லூக் 12:4 லூக் 12:5 15அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்: அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.நீதி 19:12 யோபு 29:23 யோபு 29:24 சங் 4:6 சங் 21:6 அப் 2:28 16பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்: வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.நீதி 3:15-18 நீதி 4:7 நீதி 8:10 நீதி 8:11 நீதி 8:19 யோபு 28:13-28 சங் 119:127 பிரச 7:12 மத் 16:26 லூக் 12:21 17நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்: தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புடனிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.நீதி 4:24-27 ஏசா 35:8 அப் 10:35 அப் 24:16 தீத் 2:10-14 18அழிவுக்கு முந்தியது அகந்தை: வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.நீதி 11:2 நீதி 17:19 நீதி 18:12 நீதி 29:23 எஸ்தர் 3:5 எஸ்தர் 6:6 எஸ்தர் 7:10 ஏசா 2:11 ஏசா 2:12 ஏசா 37:10-13 ஏசா 37:38-13 தானி 4:30-37 தானி 5:22 தானி 5:24 ஒபதி 1:3 ஒபதி 1:4 மத் 26:33-35 மத் 26:74-35 ரோம 11:20 1தீமோ 3:6 19மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.சங் 34:18 சங் 138:6 ஏசா 57:15 மத் 5:3 லூக் 1:51-53 லூக் 18:13 லூக் 18:14 20போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்: ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.நீதி 8:35 நீதி 13:15 நீதி 17:2 நீதி 19:8 நீதி 24:3-5 ஆதி 41:38-40 தானி 1:19-21 மத் 10:16 21ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்: இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.நீதி 16:23 நீதி 10:8 நீதி 23:15 1இரா 3:12 ரோம 16:19 யாக் 3:17 22விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்: மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.நீதி 10:11 நீதி 13:14 நீதி 14:27 நீதி 18:4 யோவா 5:24 யோவா 6:63 யோவா 6:68 23ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சே விவேகமுள்ளதாக்கும்: அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.நீதி 15:28 நீதி 22:17 நீதி 22:18 சங் 37:30 சங் 37:31 சங் 45:1 மத் 12:34 மத் 12:35 கொலோ 3:16 24இன்சொற்கள் தேன்கூடு போன்றவை: மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.நீதி 12:18 நீதி 15:23 நீதி 15:26 நீதி 23:16 நீதி 25:11 நீதி 25:12 நீதி 27:9 உபா 32:2 உன்ன 4:11 யோவா 20:19-21 25ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்: முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.நீதி 12:26 நீதி 14:12 ஏசா 28:15-19 யோவா 7:47-49 யோவா 9:40 அப் 26:9 2கொரி 13:5 26உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது: உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.நீதி 9:12 நீதி 14:23 பிரச 6:7 1தெச 4:11 1தெச 4:12 2தெச 3:8-12 27பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்: எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.1சாமு 25:17 2சாமு 20:1 28கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்: புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.நீதி 6:14 நீதி 6:19 நீதி 15:18 நீதி 18:8 நீதி 26:20-22 நீதி 29:22 நீதி 30:33 1தீமோ 6:3-5 யாக் 3:14-16 29வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.நீதி 1:10-14 நீதி 2:12-15 நீதி 3:31 1சாமு 19:11 1சாமு 19:17 1சாமு 22:7-9 1சாமு 23:19-21 நெகே 6:13 2பேது 3:17 30கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்: வாயை மூடிக்கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.நீதி 6:12-14 நீதி 10:10 ஏசா 6:10 மத் 13:15 யோவா 3:20 31நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி: அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.நீதி 20:29 லேவி 19:32 யோபு 32:6 யோபு 32:7 32வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்: நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.நீதி 14:29 நீதி 15:18 நீதி 19:11 சங் 103:8 எபே 5:1 யாக் 1:19 33மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்: ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.எண் 26:55-65 யோசு 7:14 யோசு 18:5 யோசு 18:10 1சாமு 14:41 1சாமு 14:42 நெகே 11:1 யோனா 1:7 அப் 1:26