7
சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்: ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களiயும் கொடுப்பானோ? அதனால் எங்கள் எல்லோரையும் ஆயிரவர் தலைவர்களாகவும், நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியும்?
8
பின் எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்த போது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை: என்மேல் மனமிரங்கி அதை எனக்கு தெரிவிக்க உங்களில் ஒருவனும் வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கு எதிராகத் தூண்டிவிட்டான் என்றான்.
9
அப்பபொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, “நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்.
10
அகிமெலங்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தார். மேலும் அவனுக்கு வழியுனவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார் “என்றான்.அதைக் கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லோரும் அரசிடம் வந்தனர்.
11
அப்பொழுது சவுல், “அகிப்தூபின்மகனே கேள் “, என அவரும், “இதோ உள்ளேன் தலைவரே! என்றார்.