4
நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்: நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.
5
நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமையே செய்தனர்: அன்புக்குப் பதிலாக அவர்கள் வெறுப்பையே காட்டினர்:
6
அவர்கள் கூறியது: “அவனுக்கு எதிராகத் தீயவனை எழும்பச் செய்யும்! 'குற்றம் சாட்டுவோன்' அவனது வலப்பக்கம் நிற்பானாக!
7
நீதி விசாரணையின்போது அவன் தண்டனை பெறட்டும்! அவன் செய்யும் வேண்டுகோள் குற்றமாகக் கருதப்படுவதாக!
8
அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்!
9
அவனுடைய பிள்ளைகள் தந்தை இழந்தோர் ஆகட்டும்! அவனுடைய மனைவி கைம்பெண் ஆகட்டும்!
10
அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்! பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்!
11
அவனுக்கு உரியவற்றை எல்லாம் கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்! அவனது உழைப்பின் பயனை அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!
12
அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனும் இல்லாதிருக்கட்டும்! தந்தையை இழந்த, அவனுடைய பிள்ளைகள்மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்!
13
அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்! அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய பெயர் இல்லாது போகட்டும்!