14
இளைஞரின் அறிவுரைக்கு ஏற்ப அவன் அவர்களிடம்,‘என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்’: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன், என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்: நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன் ‘ என்று கூறினான்.
15
இவ்வாறு அரசன் மக்களுக்குச் செவிகொடுக்கவேயில்லை: ஏனெனில் சீலோவியரான அகியா மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகள் நிறைவேற, இவை யாவும் கடவுளால் நிகழ்ந்தன.
16
இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டதைக் கண்டு,‘எங்களுக்குச் தாவீதிடம் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ரயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்! தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்! ‘ என்று கூறிக் கொண்டே தம்’ கூடாரங்களுக்குத் திரும்பினர்.