| 1 | தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன். | ஆமோ 7:1 ஆமோ 7:4 ஆமோ 7:7 |
| 2 | அவர், “ஆமோஸ்! என்ன காண்கிறாய்?” என்று கேட்டார்: நான், “கனிந்த பழங்கள் உள்ள கூடை” என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: “என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது: இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன். | ஆமோ 7:8 எரே 1:11-14 எசே 8:6 எசே 8:12 எசே 8:17 சகரி 1:18-21 சகரி 5:2 சகரி 5:5 சகரி 5:6 |
| 3 | அந்நாளில்”கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்: கணக்கற்ற பிணங்கள் உரிய மரியாதையின்றித் தூக்கியெறியப்படும், எங்கும் ஒரே அமைதி!” என்கிறார் தலைவராகிய ஆண்டவர். | ஆமோ 8:10 ஆமோ 5:23 ஓசி 10:5 ஓசி 10:6 யோவே 1:5 யோவே 1:11 யோவே 1:13 சகரி 11:1-3 |
| 4 | “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: | ஆமோ 7:16 1இரா 22:19 ஏசா 1:10 ஏசா 28:14 எரே 5:21 எரே 28:15 |
| 5 | “நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: | எண் 10:10 எண் 28:11-15 2இரா 4:23 சங் 81:3 சங் 81:4 ஏசா 1:13 கொலோ 2:16 |
| 6 | வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம்” என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? | ஆமோ 8:4 ஆமோ 2:6 லேவி 25:39-42 நெகே 5:1-5 நெகே 5:8-5 யோவே 3:3 யோவே 3:6 |
| 7 | ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். | ஆமோ 6:8 உபா 33:26-29 சங் 47:4 சங் 68:34 லூக் 2:32 |
| 8 | இதனை முன்னிட்டு நாடு நடுநடுங்காதா? அதில் வாழ்வோர் அனைவரும் புலம்பமாட்டாரா? நாடு முழுவதும் நைல்நதியின் வெள்ளமெனச் சுழற்றியெறியப்படாதா? எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா? | சங் 18:7 சங் 60:2 சங் 60:3 சங் 114:3-7 ஏசா 5:25 ஏசா 24:19 ஏசா 24:20 எரே 4:24-26 மீகா 1:3-5 நாகூ 1:5 நாகூ 1:6 ஆபகூ 3:5-8 ஆகா 2:6 ஆகா 2:7 |
| 9 | தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன். | ஆமோ 4:13 ஆமோ 5:8 யோபு 5:14 ஏசா 13:10 ஏசா 29:9 ஏசா 29:10 ஏசா 59:9 ஏசா 59:10 எரே 15:9 மீகா 3:6 மத் 24:29 வெளிப் 6:12 வெளிப் 8:12 |
| 10 | உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்: எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன், ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவதுபோல நிங்களும் புலம்புமாறு செய்வேன்: அதன் முடிவு கசப்புமிக்க நாளாய் இருக்கும்.” | ஆமோ 8:3 ஆமோ 5:23 ஆமோ 6:4-7 உபா 16:14 1சாமு 25:36-38 2சாமு 13:28-31 யோபு 20:23 ஏசா 21:3 ஏசா 21:4 ஏசா 22:12-14 தானி 5:4-6 ஓசி 2:11 நாகூ 1:10 |
| 11 | தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “இதோ! நாள்கள் வரப்போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்: அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று: ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது. | 1சாமு 3:1 1சாமு 28:6 1சாமு 28:15 சங் 74:9 ஏசா 5:6 ஏசா 30:20 ஏசா 30:21 எசே 7:26 மீகா 3:6 மத் 9:36 |
| 12 | ஒரு கடல் முதல் மறு கடல்வரை, வடதிசை முதல் கீழ்த்திசைவரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள். | நீதி 14:6 தானி 12:4 மத் 11:25-27 மத் 12:30 மத் 24:23-26 ரோம 9:31-33 ரோம 11:7-10 2தீமோ 3:6 2தீமோ 3:7 |
| 13 | அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள். | உபா 32:25 சங் 63:1 சங் 144:12-15 ஏசா 40:30 ஏசா 41:17-20 எரே 48:18 புலம் 1:18 புலம் 2:10 புலம் 2:21 ஓசி 2:3 சகரி 9:17 |
| 14 | சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு, “தாண் நாடே! வாழும் உன் கடவுள்மேல் ஆணை!” எனவும் “பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!” எனவும் சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்: மீண்டும் எழவே மாட்டார்கள். | ஓசி 4:15 செப் 1:5 |