ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே: காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே: தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே: காலைப்பொழுதைக் காரிருள் ஆகச்செய்பவரும் அவரே: நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.