மீகா 1:3-5 - WCV
3
இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார்: அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார்.
4
நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்: பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
5
யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே இவை எல்லாம் நேரிடும். யாக்கோபின் குற்றத்திற்குக் காரணம் யாது? சமாரியா அன்றோ! யூதாவின் தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது? எருசலேம் அன்றோ!